உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      உலகம்
plane crashes Ukraine 2019 10 05

கீவ் : உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து உக்ரைன் நாட்டின் விமானப் படைக்கு சொந்தமான ஆன்டோனோவ் 12 ரக சரக்கு விமானம் உக்ரைனின் லிவிவ் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். இந்த விமானம் லிவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தை நெருங்கிய போது, திடீரென விமானத்தின் எரிபொருள் காலியானது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கி.மீ.க்கு முன் உள்ள காட்டு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து