முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சவுதி பயணம்?

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட சவுதியின் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரியாத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் சவுதி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்ற போதும், பிரதமரின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை அஜித் தோவல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றார். அப்போது அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான அப்துல் அஜீஸ் சவுத் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் சவுதி அரேபியா 100 மில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையிலும், சவுதி எண்ணெய் நிறுவனமான அராம்கோ இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையிலும், பிரதமர் மோடியின் சவுதி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து