முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. மூன்று லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் சாலை விபத்துக்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்ட காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மா.காசியய்யா, வேலூர் மாவட்டம், மேல்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பா. சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சு. சந்திரசேகர், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. துரைராஜ், விருதுநகர் மாவட்டம், மாவட்டக் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த என். திருப்பதி, மல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வி. பழனி செல்வ பாரதி, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம். கணேசமூர்த்தி, அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கு. குமார், மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த வந்த பிச்சையம்மாள், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. சுவாமிநாதன், வாய்மேடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம். கண்ணையன், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். இராஜமாரி, சேலம் மாவட்டம், பொருளாதாரக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பொ. கணேசன், ஓமலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெ. சரவணன், சென்னை பெருநகரக் காவல், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆ. ஜானகிராமன், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செ. அசோக் குமார், கொள்ளிடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜா, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோதண்டபாணி, கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ். கணேசன், சேலம் மாவட்டம், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. வேணுகோபால், சென்னை பெருநகரக் காவல், புனித தோமையர் மலை, ஆயுதப்படை, “ஆ” நிறுமம், 7 ஆம் அணியில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்த வந்த ஆ. சுபாஷ், தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஐ. ஜேக்கப், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோ. சுரேஷ்குமார் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உடல் நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து