முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் தாமதமானால் இழப்பீடு: ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் விரிவுபடுத்த ரயில்வே அமைச்சகம் திட்டம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தேஜஸ் ரயிலை தொடர்ந்து ரயில் தாமதமானால் இழப்பீடு வழங்கும் திட்டத்தை ராஜ்தானி, சதாப்தி ரயில்களுக்கும் விரிவுபடுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

லக்னோ - டெல்லி இடையே இயக்கத்தை துவங்கியுள்ள தேஜஸ் ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மணி நேர தாமதத்திற்கு 100 ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஏற்பட்டால் 250 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடந்து தற்போது ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் இயக்கப்படும் இந்த ரயிலானது விரைவில் தனியார் மூலம் இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தேஜஸ் ரயிலில் உள்ளதை போல் ரயில் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை மற்ற உயர்தர ரயில்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ரயில்வேத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது இந்தியாவில் ராஜ்தானி, சதாப்தி, காட்டிமான், தேஜஸ் மற்றும் வந்தேபாரத் ஆகிய உயர்தர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து இந்த ரயில்கள் அனைத்திலும் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை 2020-ம் ஆண்டில் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா மற்றும் டெல்லி - ஹவுரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களுக்கு விரிவுபடுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து