முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுத பூஜை விடுமுறை: சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 2 லட்சம் பேர் பயணம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : ஆயுத பூஜை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டதையொட்டி, சென்னையிலிருந்து 2 லட்சம் பேர் அரசுப் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

பண்டிகை நாட்களில் சென்னையில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் முதன்முறையாக ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மையத்தில் பேருந்துகளுக்கான முன்பதிவும் தொடங்கியது. இதுமட்டுமின்றி இணையதளத்திலும் முன்பதிவு செய்யப்பட்டது. ஆயுத பூஜை, விஜயதசமியை மற்றும் சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 4 நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பணியில் உள்ள பெரும்பாலானோர் (வெள்ளிக்கிழமை) முதலே தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். இதற்காக போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம் பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 1,695 பேருந்துகள் என (4–ம் தேதி) முதல் 6–ம் தேதி வரை 3 நாள்களும் சோ்த்து மொத்தமாக சென்னையிலிருந்து 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரிலிருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூரிலிருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் ஆயுதபூஜை முடிந்த பின்பு 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், பிற ஊர்களிலிருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து கோயம்புத்தூருக்கு 490 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து பெங்களூருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தமாக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 2 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊா்களுக்குப் பயணம் செய்துள்ளனர். தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்வதால் அனைத்து பிளாட் பாரங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேருந்துகள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் பேருந்துகளின் நுழைவு பகுதியை மாற்றியிருந்தனர். திருட்டு, கொள்ளச் சம்பவங்களைத் தடுக்கும் வண்ணம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பஸ்கள் புறப்படும் இடம், நேரம் மற்றும் சேரும் இடம் குறித்த தகவல்கள் மைக்கில் வெளியிடப்பட்டன. இதே போல சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன் பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து