லண்டனில் ஹர்திக் பாண்டியா முதுகு அறுவை சிகிச்சை வெற்றிகரம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      விளையாட்டு
Hardik Pandya 2019 10 05

லண்டன் : முதுகுக் காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இன்னும் 5 மாதங்களுக்கு இவரால் கிரிக்கெட் ஆடமுடியாது. அதாவது அடுத்து இவர் ஆடி வருவதற்கு 8-9 மாதங்கள் ஆகலாம் என்றே தெரிகிறது.

தன்னுடைய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வாசகம் வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்கள் ஆசிகளுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார். 5 மாதங்கள் ஹர்திக் கிரிக்கெட் ஆட முடியாது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடப்புத் தொடரில் டி 20 போட்டிகளில் ஆடினார். ஆனால் காயம் தீவிரமடைய அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினார். ஆசியக் கோப்பை யு.ஏ.இ.யில் நடந்த போது இவருக்கு முதுகுப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அப்போது விரைவில் குணமாகி ஐ.பி.எல். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் ஆடினார். அவற்றில் ஆடி முடித்தவுடன் மீண்டும் முதுகுவலி தொடங்கியது. மீண்டும் டி20 உலகக்கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரிலும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து