முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களை வரவேற்கும் வகையில் காவல் நிலையங்கள் மாற வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா விருப்பம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : புகார் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் வகையில் காவல் நிலையங்கள் மாறவில்லையே என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய போலீஸ் கழகம், நல்லாட்சிக்கான மத்திய அமைப்பு, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஒன்றாக இணைந்து காவல் பணியில் கம்பீரம் என்னும் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சியை டெல்லியில் நேற்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று உரையாற்றினார். பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு தேடி வரும் முதல் இடம் காவல் நிலையம் என்பதால் தங்களது பிரச்சனை அங்கிருக்கும் காவல் துறையினரால் கவனிக்கப்படும். தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் உருவாக வேண்டும். தற்போது காவல் நிலையங்களுக்குள் நுழையும் புகார்தாரர்கள் நமது புகார் பதிவு செய்யப்படுமா? நாம் எப்படி நடத்தப்படுவோம்? எனும் அவநம்பிக்கையுடன் வருகின்றனர் என்பதை நீங்கள் (போலீசார்) அறிவீர்கள். மக்களின் நட்புக்குரிய இடமாக காவல் நிலையங்களை மாற்றுவது தொடர்பாக நாம் காலகாலமாக பேசிக் கொண்டுதான் வருகிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி நடப்பதில்லை. மூத்த அதிகாரிகள் இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளாத வரையில் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்றே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து