முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தூதருடன் தலிபான்கள் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை  முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலான தலிபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுகிற நிலையும் உருவானது. ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை குறி வைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால், பேச்சு வார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முறித்துக் கொண்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலான தலிபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இருப்பினும் இப்போதைக்கு அமெரிக்காவும், தலிபான்களும் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து