முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் டிக்டாக் பிரபலம் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : அரியானா மாநிலம் ஹிசார் அருகேயுள்ள ஹோண்டூர் கிரா மத்தை சேர்ந்தவர் சோனாலி போகத். கணவரை இழந்த இவர் 10 வயது மகளுடன் வசிக் கிறார். டிக்டாக் செயலியில் பாலிவுட், பஞ்சாபி, போஜ்புரி பாடல்களுக்கு வாயசைத்து, நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், அரியானாவில் மிகவும் பிரபலம். அரியானா, பஞ்சாப் மட்டுமின்றி வடமாநிலங்கள் முழு வதும் டிக்டாக் சோனாலிபோகத்தை தெரியாதவர்களே கிடையாது.

அரியானாவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சோனாலி போட்டியிட வேண்டும் என்று அவரது டிக்டாக் ரசிகர்கள் அன்பு கட்டளையிட்டனர். இதை ஏற்று பா.ஜ.க.வில் அவர் முறைப் படி விண்ணப்பித்தார். இதையடுத்து அரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட சோனா லிக்கு பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இது குறித்து சோனாலி கூறியதாவது:

டிக் டாக் செயலியில் பிரபல மானதால் பா.ஜ.க. சார்பில் போட்டியிட எனக்கு சீட் கிடைத்துள்ளது. சிறு வயது முதலே நான் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர். தேர்தல் பிரச்சாரத்துக்கு டிக் டாக் செயலியை பயன்படுத்துவேன். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் தேசப்பற்று குறித்தும் டிக் டாக்கில் விழிப்புணர்வு பாடல்களை வெளியிடுவேன். தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவேன். பா.ஜ.க.வில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர் சுமித்ரா மகாஜனை எனது அரசியல் குருவாகக் கருதுகிறேன். இவ்வாறு சோனாலி போகத் தெரிவித்தார். பாஜக வேட்பாளராக போட்டி யிடுவதால் சமூக வலைதளங்களில் அவரது டிக்டாக் பாடல்கள் அதிக மாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து