முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயணமாக 10-ம் தேதி ஜனாதிபதி கர்நாடகம் வருகை

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள்கள் பயணமாக வரும் 10-ம் தேதி கர்நாடகத்துக்கு வருகை தருகிறார்.

அரசு முறை பயணமாக வரும் 10-ம் தேதி டெல்லியில் இருந்து மைசூருக்கு வருகை தரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு மைசூரு உடையார் மன்னர் மறைந்த ஜெயசாமராஜ உடையாரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அன்று மைசூரில் தங்கும் அவர், மறுநாள் 11-ம் தேதி நஞ்சன்கூடில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின்னர், சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்.

அதன் பிறகு, மைசூரில் உள்ள வருணா கிராமத்தில் ஜே.எஸ்.எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்றிரவு பெங்களூருக்கு வருகை தரும் ஜனாதிபதி, கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

அதை தொடர்ந்து 12-ம் தேதி கவர்னர் மாளிகையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுடன் காலை சிற்றுண்டி உண்கிறார். அதன் பிறகு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் இல்லத்துக்குச் சென்று, அவரது மறைவுக்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

அதன் பிறகு, பெங்களூரு நகர மாவட்டத்தின் ஆனேக்கல் வட்டத்தின் ஜிகனியில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அணுகுமுறை பயிற்சி மையத்துக்குச் சென்று, அதன் செயல்பாடுகளைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, தனது பயணத்தை முடித்துக் கொண்டு, பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அகமதபாத் செல்கிறார் என கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து