வெற்றியை குவிக்கும் நாளாக ஆயுத பூஜை அமையட்டும் - தெலங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      தமிழகம்
tamilisai soundarrajan 2019 09 03

சென்னை : ஆயத பூஜையும் விஜயதசமியும் தமிழக மக்களுக்கு வெற்றிகளை குவிக்கும் நாளாக அமைய வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

கல்வித்தெய்வம் சரஸ்வதியின் அருளும் செல்வ மகள் லட்சுமியின் அருளும் ஒவ்வொரு இல்லத்திற்கும் கிடைக்க வழிவகை செய்து இந்தியாவில் தட்டுப்பாடுகள் மறைந்து தாராளமாக எல்லாம் கிடைத்து மக்கள் தனலட்சுமியின் அருளையும் தீவிரவாதம் மறைந்து தைரிய லட்சுமியின் அருளையும் பெற வேண்டும். இந்திய மக்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் எடுத்துக் கொண்ட காரியங்கள் எல்லாவற்றிலும் முழு ஈடுபாட்டோடு வெற்றியை நோக்கி செயல்படுத்துபவர்கள் செய்யும் தொழிலே தெய்வமென்று தெய்வத்தை போற்றும் தெய்வமாக தொழிலையும் போற்றும் அவர்கள் அத்தனை பேரும் அவர்கள் செய்யும் பணியிலும் தொழிலிலும் விஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும். இந்த ஆயுத பூஜை பல வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக விளங்க வேண்டும் என்று இந்திய மக்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவி்த்துள்ளார்.

கவர்னர் வாழ்த்து

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழகம் முழுவதும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆயுத பூஜையை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்றிட வாழ்த்துக்கிறேன். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளில் விஜயதசமி வெற்றித்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமிழக மக்கள் சமூக ஒற்றுமையோடும் வேற்றுமையில் ஒற்றுமையும் ஆக்கச்சிந்தனையும் ஒருங்கே அமைந்த வாய்ப்புகளை பெற்று வளமான வாழ்க்கை பெற வேண்டும் என்று வாழ்த்துக்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மனித சமூதாயத்தின் அடிப்படை தேவைகளாக இருக்கும் வீரம் கல்வி செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்னற மாபெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்கு நமது நன்றியையும் வணக்கத்தையும் வேண்டுதலையும் தெரிவிக்கும் நவராத்திரி நாட்களாக 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை குடும்ப விழாவாக கொண்டாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு வெற்றி திருவிழாவான விஜயதசமி, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து