தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      விளையாட்டு
india win 2019 10 06

விசாகப்பட்டினம் : தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் இரட்டை சதமும் (215 ரன்), ரோகித் சர்மா சதமும் (176 ரன்) விளாசினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தென்ஆப்பிரிக்கா தொடங்கியது. 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளுக்கு 385 ரன்கள் சேர்த்து இருந்தது. நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், 431 ரன்களை குவித்து தென்ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியை விட தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பின் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்த பொழுது ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4 ரன்கள் எடுத்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் எல்கார் 3 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அந்த அணியினர் விளையாடினர். இதில் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மர்க்ராம் 3, டே புரூயின் 5 ரன்கள் எடுத்திருந்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்த போட்டியின் 5-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் 10 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழந்து 18 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்த ஓவரை இந்திய அணியின் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் டி புருயின் அடித்து ஆட முற்பட்டு அது பலனளிக்காமல் பந்து ஸ்டம்பில் பட்டு வீழ்த்தியது. இதனால் 10 ரன்களில் டி புருயின் வெளியேறினார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 350-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதனால் முத்தையா முரளிதரன் செய்த சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். மர்க்ராம் 39, பவுமா 0, டூ பிளெஸ்சிஸ் 13, டி காக் 0, பிலாந்தர் 0 மற்றும் மகாராஜ் 0 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் 5-வது நாளில் உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்க அணி 42 ஓவர்களில் 117 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது. உணவு இடைவேளை முடிந்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் தடுமாற்றத்தை தான் கண்டது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் முலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பில் சமி 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து