வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனைக்கு வெள்ளி

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      விளையாட்டு
Indian shuttler silver 2019 10 06

பெல்ஜியம் : பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கணை வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

பெல்ஜியம் நாட்டிலுள்ள கெண்ட் நகரில் உலக அளவிலான டர்னாய் சேடிலைட் வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானிதேவி பங்கேற்றார். தனிநபர் சேபர் பிரிவில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டியில், பவானி தேவி, அசர்பெய்ஜான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை அண்ணா பாஸ்தாவுடன் மோதினார்.

அவரிடம் 10-க்கு15 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். முன்னதாக உலக தரவரிசையில் 44-வது இடத்தில் இருக்கும் பவானிதேவி, இந்த போட்டியில் பெற்ற 3 புள்ளிகள் மூலம் மேலும் முன்னேற்றம் அடைந்து ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை நெருங்க முடியும் என்று நம்புவதாக கூறினார். இப்போட்டியில் கிடைத்த வெற்றி மூலம் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து