துனிசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பெண்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      உலகம்
Boat crashes Tunisia 2019 10 08

லம்பேடுசா : துனிசியாவில் அகதிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.

துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. அந்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கிய போது, மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 22 பேரை மீட்டனர். மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மத்தியதரைக் கடலில் இது போன்ற விபத்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து