87-வது விமானப்படைத் தினம்: எந்த விலை கொடுத்தாலும் இந்திய வான் வெளியின் இறையாண்மையை காப்போம்: விமானப்படைத் தளபதி சபதம்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      இந்தியா
Air Force Day 2019 10 08

ஹில்டன் : இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 87-வது இந்திய விமான படை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.  87-வது விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹில்டன் விமான தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஜாக்குவார், மிக்-21 சுகோய் உள்ளிட்ட போர்விமானங்கள் வானில் வட்டமிட்டு சாகச நிகழ்ச்சிகளை நடத்தின.

சினூக் மற்றும் அபாச்சி ரக ஹெலிகாப்ட்டர்கள் வானில் வட்டமடித்து சாகசங்களை நிகழ்த்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைத் தளபதி ராகேஷ்குமார்சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; விமானப்படை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி. எந்த விலை கொடுத்தாலும் இந்திய வான் வெளியின் இறையாண்மையை காப்போம். நம்முடைய தேச நலனை காக்கும் பணியில் எல்லா நிலைகளிலும் செயலாற்றுவோம் என நாட்டுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து