முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.29,032-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 23 குறைந்து ரூ.3,629-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் வரும் பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலையும் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 29,216-க்கு விற்பனையானது. கிராம் ரூ. 3,652-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி,ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.184 குறைந்து விற்பனையானது. அத்துடன் கிராம் ரூ. 23 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் ரூ.3,629-க்கும் ஒரு சவரன் ரூ.29,032-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.48.70-க்கும், கிலோ ரூ.48,700க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து