சீனாவில் மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் உடல் கருகி பலி

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      உலகம்
china fire accident 2019 10 09

பெய்ஜிங் : சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனா நாட்டின் அன்குய் மாகாணத்தில் உள்ளது போசோவ் நகர். போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ள ஒரு டவுன்ஷிப் சுகாதார மையத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது வரை 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து