சீன அதிபருக்காக சென்னையில் வந்திறங்கிய சொகுசு கார்கள்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
Chinese President Luxury cars 2019 10 09

சென்னை : இந்தியா வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பயணத்துக்காக 4 சொகுசு கார்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கியுள்ளன.

சீனாவில் இருந்து, அதிபர் ஜி ஜின்பிங்கின் தேவைக்காக 4 சொகுசு கார்கள், கார்கோ மற்றும் அவரது உடைமைகள் என ஒரு சிறப்பு விமானம் முழுக்க பொருட்கள் சென்னை வந்தடைந்துள்ளது.

சென்னை வந்திறங்கிய சொகுசு கார்கள் நேற்று பிற்பகலில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு, அதிபரின் பயணத்துக்கு தயார் செய்யப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச உள்ளனா். மேலும் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த பல்லவா் கால சிற்பங்களையும், கடற்கரை கோயிலையும் சுற்றி பார்க்க உள்ளனா். இதையடுத்து மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து