முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு ரூ. 6000 உதவித்தொகை ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : விவசாயிகள் உதவித் தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடகர் கூறியதாவது:-

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ரபி பருவ விதைப்புக்கு முன்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த 5300 காஷ்மீரைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5.5. லட்சம் ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து