முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பசுமைப்படை சார்பில் பொதுமக்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கிடும் முகாம்! திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு!!

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மத்திய மாநில சுற்றுச்சூழல் துறை மற்றும் மதுரை மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பாக திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் நிறுவனம் நடத்திய குப்பைத் தொட்டிகள் வழங்கும் முகாம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் வரவேற்று பேசினார்.மதுரை மாவட்ட கல்வி அலுவலர் ரா.வளர்மதி தலைமை வகித்தார்.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உஷா,மாநகராட்சி மேற்குமண்டல சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை மாணவர்கள் 100பேர் மற்றும் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் 25பேர் மற்றும் ஏராளமான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேல அண்ணாத்தோப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஈரக்கழிவுகள்,உலர் கழிவுகளை தரம் பிரித்து வழங்கிடும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான குப்பைத் தொட்டிகள் 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்கப்பட்டது.இவற்றினை மதுரை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிரீன் டிரஸ்ட் நிர்வாகி குழந்தைவேல் தலைமையில் பசுமைப்படை மாணவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர் வீடுவீடாகச் சென்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.மேலும் அப்பகுதி முழுவதும் ஏராளமான மரக்கன்றுகளும் தேசிய பசுமைப் படையினரால் நடப்பட்டது.முகாமின் நிறைவில் மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தம் நன்றி கூறினார்.சுற்றுச் சூழலை பாதுகாத்திடும் வகையில் பொதுமக்களின் வீடுதேடிச் சென்று குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்ட நிகழ்வு அனைத்து தரப்பு மக்களாலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து