முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணைக்குட்டைகளில் திலேபியா மீன்கள் வளர்க்க ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்போர் திலேபியா மீன்களை வளர்த்து பயனடையலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆலொசணை வழங்கி உள்ளார்.
      பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகள் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்களை தேர்வு செய்து தங்களது பண்ணைக் குட்டைகளில் வளர்த்தால் மற்ற மீன்களை வளர்ப்பதை விட இதில் அதிக இலாபம் பெறலாம். மற்ற மீன் இனங்களை காட்டிலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம்.  இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.  மற்ற மீன்களைக் காட்டிலும் பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வேகமாக வளரக்கூடியதும் மற்றும் நுகர்வோர் அதிகம் விரும்புவதும் என இவ்வகை மீன்கள் சிறப்புத் தன்மை பெற்றுள்ளது.  நீரின் அமிலத்தன்மை ஏற்றத்தாழ்வுகளையும் அதிகளவில் எதிர்கொண்டு வெகமாக வளரக்கூடியது.  எனவே விவசாயிகள் தங்களது பண்ணைக்குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்களை வளர்த்து பயன்பெறலாம்.  மேலும், இவ்வகை மீன்களை வளர்க்கும் விவசாயிகள் தங்களது பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து எக்காரணம் கொண்டும் இம்மீன்கள் அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் பரவா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டம்.  இவ்வாறாக சரியான முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து மீன் பண்ணைக்குட்டையை ராமநாதபுரம் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து அதன் பின்னரே தங்களது பண்ணைகளில் திலேபியா மீன்களை வளர்க்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. 
    மேலும் இது குறித்த விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டட வளாகத்தில் தரை தளத்தில் செயல்பட்டு வரும் மீன்வள உதவி இயக்குநர் (வடக்கு) (அலுவலக தொலைபேசி எண்.04567 230355) அலுவலகத்தை தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களைப் பெற்று பயனடையலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து