முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீதான தாக்குதல்: துருக்கி அரசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகள் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும், மீறினால் கடுமையான எதிர்நடவடிக்கை எடுப்போம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப பெறப் போவதாக கடந்த ஞாயிறன்று டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிந்தவரை மனிதாபிமானத்துடன் செய்யாவிட்டால், பொருளாதாரத் தடைகளை விட கடுமையான நகர்வுகள் குறித்து பரிசீலிப்பேன். துருக்கி அரசு போர் நடவடிக்கைகளை சுமூகமான முறையில் செயல்படுத்தலாம் அல்லது கடுமையாகவும் செயல்படுத்தலாம். ஒருவேளை துருக்கி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், மிகப் பெரிய பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து