முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முன்னாள் துணை முதல்வரின் வீடு, கல்லூரியில் வருமான வரி சோதனை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு :  கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவின் வீடு மற்றும் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்த போது கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி வகித்தவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர். இந்த நிலையில் தும்கூரூ உள்ளிட்ட இடங்களில் உள்ள பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.  

இது குறித்து பரமேஸ்வரா கூறுகையில், எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது எனத் தெரியவில்லை. நான் முறைகேடு எதிலும் ஈடுபடவில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ சோதித்து பார்த்து கொள்ளலாம் எனக் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து