முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் - சீன அதிபர் வருகை: 32 இடங்களில் வரவேற்பு அளிக்க பா.ஜ.க. திட்டம்; பொன்.ராதாகிருஷ்ணன்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது 32 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 32 இடங்களில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவருக்கும் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன்,

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனத்தில் இந்தியா - சீனா இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு குறித்தும் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் முக்கியத்துவம் குறித்தும் காணொளிகள் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து