முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க கூடாது - மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாது அணை பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

மேகதாது அணை உட்பட காவிரியின் குறுக்கே எந்தவொரு திட்டத்துக்கும் தமிழகம் உட்பட காவிரி கரையோர மாநிலங்களின் அனுமதியின்றி ஒப்புதல் அளிக்கக் கூடாது என 10.07.2019 அன்று தான் ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளேன். அவ்வாறு அனுமதி அளிப்பது காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கு எதிரானது. காவிரிப்படுகையில் உள்ள மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான நீரை தேக்கிக் கொள்ளவும் விநியோகிக்கவும் ஏற்ற வசதிகள் உள்ளன என காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருப்பதால் மேற்கொண்டு அணை கட்ட கர்நாடக அரசு கோருவதை ஏற்க முடியாது.

மேலும் அந்த அணை கட்டுவதற்கு தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு அவ்வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த காரணங்களின் அடிப்படையில் மேகதாதுவில்  அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து