முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

370-வது பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறாரா? இல்லையா? ராகுல் தெளிவுபடுத்த அமித்ஷா வேண்டுகோள்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகா : சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித்ஷா கூறினார்.  

பா.ஜனதா ஆளும் அரியானா மாநிலத்துக்கு 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா அம்மாநிலத்தில் கைத்தால் என்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது:-

சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் அவரவர் நாட்டுக்கே அனுப்ப வேண்டும் என்பதுதான் பா.ஜனதா அரசின் கொள்கை. ஏனென்றால் அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். 2024-ம் ஆண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு உங்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது, சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்பட்டு இருப்பார்கள்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க முந்தைய அரசுகளுக்கு துணிச்சல் இல்லை. ஆனால், மோடி அரசு மீண்டும் பதவிக்கு வந்தவுடன் முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்து காட்டியுள்ளது.

இது, பா.ஜனதாவின் சொந்த பிரச்சினை அல்ல, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, எல்லா கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்த்தோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, பா.ஜனதா என்ன செய்தாலும் எதிர்க்கிறது.

370-வது பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறாரா? இல்லையா? என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும். வங்காளதேசம் உருவாக்கப்பட்டபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை வாஜ்பாய் புகழ்ந்தார். ஏனென்றால் அது தேசநலன் சம்பந்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட குறைவான தடவையே பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால், மன்மோகன் சிங்கின் பயணம் தோல்வியில் முடிந்ததால், அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து