முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா நியமனம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.  

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. தற்போது கர்நாடக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

அக்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படாமல் இருந்தார். இந்நிலையில் கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும், சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர்.பாட்டீலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து