முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொசு ஒழிப்பு பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள் வீடு வீடாக ஆய்வு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 4 ஆயிரம் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 160 விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார், டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவிக்கையில் :

காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்திடவும் 100 சதவீதம் உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திடவும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை தொடர்ந்து பல்வேறு பன்முக தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியதை முன்னிட்டு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையானது உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், 4000-க்குத் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அறியப் பெற்றவுடன், அரசு மருத்துவ நிலையங்களை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துக்கடைகளில் பொதுமக்களுக்கு உரிய பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநரகம் மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்தான நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு, இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் டெங்குக் காய்ச்சலின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அதில் மக்களின் பங்கு குறித்து உறுதிமொழி எடுக்கப்படுகிறது. பொது கட்டடங்கள், அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பகுதிகளை பார்வையிட்டு, கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவ கையேடு மற்றும் புத்தகம் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் பொது இடங்களிலும் திரையரங்குகளிலும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ்மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் நடராஜன், சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்). மதுசூதன் ரெட்டி., பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சுவாதி, சென்னை மாநகராட்சி அலுவலர்கள், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து