முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வருகை: மாமல்லபுரத்தில் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆய்வு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சீனா நாட்டு ஜனாதிபதி வருகையை தொடர்ந்து மாமல்லபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் அதிகாரிகளுடன் நேற்று மீண்டும் ஆய்வு நடத்தினார்.

சீன நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனி விமானம் மூலம் சீனாவில் இருந்து இன்று பகல் 1-30 மணிக்கு தமிழகம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சோழா கிராண்ட் ஹோட்டலில் தங்கும் ஜி ஜின்பிங், அதன் பின்னர் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். எல்லையோரங்களில் அமைதி நிலவுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது. தமிழகம் வருகை தரும் இந்திய பிரதமர் மோடி, சீன நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரை உற்சாகமாக வரவேற்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்கும் வகையில் அவர்களுக்கு வழிநெடுக நாட்டுப்புற கலைஞர்கள் தமிழ்நாட்டு பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கிட்டதட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்திய தேசியக்கொடிகளை பிடித்தப்படி வரவேற்பளிக்கின்றனர். அ.தி.மு.க. சார்பிலும் பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடி- சீனநாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரது வருகையை தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவர் வருகை தரும் நேரத்தில் புறநகர் ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில்களை தற்காலிகமாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீடுகளிலேயே பணியாற்றவும் மாற்று ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹாங்காங்கில் இருந்து இந்தியா வரும் சீன பயணிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி சீன நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகை பாதுகாப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்தில் நேற்று மாலை திடீரென ஆய்வு நடத்தினார். மாமல்லபுரம் கடற்கரை கோயில், வெள்ளை உருண்டை பாறை, அஞ்சு ரதங்கள், அர்ஜூனன் தபசு போன்ற இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் சீனா நாட்டு ஜனாதிபதி செல்லக்கூடிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்தில் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் தலைமை செயலாளர் சண்முகம், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து