முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் பரபரப்பு காங்கிரஸ் மூத்த தலைவரின் மருத்துவ கல்லூரியில் ரூ. 4.5 கோடி பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

கர்நாடகாவில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா உள்ளிட்டோருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் 2-வது நாளாக நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்தபோது கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி வகித்தவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர். இந்த நிலையில் தும்கூரூ உள்ளிட்ட இடங்களில் உள்ள பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு முறைகேடு புகாரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

இதுபோலவே கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜலப்பாவுக்கு சொந்தமான கோலார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாளாக நேற்றும் 25 இடங்களில் வருமான வரித்தறை சோதனைகள் நடைபெற்றன. இந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைபற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகளில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து