முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடக்கும் 2 பெண்கள்: நாசா

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே முதல் முறையாக 2 பெண்கள் நடக்கப்போவதாக நாசா அறிவித்து உள்ளது.

நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்ககிறது சர்வதேச விண்வெளி நிலையம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணிபுரிகிறார்கள்.  சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. ரஷ்யாவிற்கு சொந்தமாக இரண்டு சிறிய ஆராய்ச்சி கூடங்களும், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் உள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அடிக்கடி வெளியே வந்து விண்வெலி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது உண்டு. இது வரை இந்த பணியில் ஆண் விண்வெளி வீரர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக இந்த பணியில் பெண் விண்வெளி வீரர்கள் ஈடுபட உள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இரண்டு பெண் விண்வெளி வீரர்கள் இந்த மாத இறுதியில் விண்வெளியில் நடக்கபோவதாக நாசா கடந்த  4-ம் தேதி அறிவித்தது. கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோர் வரும்  21-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே வந்து இருந்து சூரிய சக்தி அமைப்பிற்கான புதிய, மேம்படுத்தப்பட்ட பேட்டரிகளை விண் வெளிநிலையத்தில் செருகுவதற்காக தயாராக உள்ளனர்.

விண்வெளியில் இது பெண்களின் முதல் விண்வெளிப் பயணமாக இருக்கும். நாசாவின் துணை தலைமை விண்வெளி வீரர் மேகன் மெக்ஆர்தர் செய்தியாளர்களிடம் கூறும் போது , அனைத்து பெண் விண்வெளி வீரர்களுக்கும் இது ஒரு மைல்கல்லாக இருக்கும். கோச் மற்றும் மீர் ஆகியோர் நாசாவின் 2013 ஆண்டு வகுப்பின் விண்வெளி வீரர்கள் ஆவார்கள். நாசாவின் கூற்றுப்படி, 1965-ம் ஆண்டில் இருந்து உலகில் 213 ஆண் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து உள்ளனர் அதை ஒப்பிடும் போது, 14 பெண்கள் மட்டுமே இதைச் செய்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் 11 விண்வெளியில் நடக்கும் சந்தர்ப்பங்கள் வர உள்ளன, அவற்றில் 10 அமெரிக்காவும் மற்றும் ஒன்று ரஷ்ய வீரர்களும் மேற்கொள்வர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து