முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் எடப்பாடி இன்று தேர்தல் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமி­ழக சட்­டசபை­யில் காலியாக உ ள்ள விக்­கி­ர­வாண்டி,நாங்­கு­நேரி ஆகிய தொகுதிகளுக்கு வரு­கிற 21-ம் தேதி இடைத்­தேர்­தல் நடக்­கி­றது. இந்த தேர்­தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்­பாளர்­களை ஆத­ரித்து கட்­சி­யின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்­பாடி பழ­னி­சாமி இன்று முதல் 18-ம் தேதி வரை சூறா­வளி பிர­சா­ரத்தை மேற்­கொள்கிறார்.

விக்கிரவாண்டி தொகு­தி­யில் இன்றும் 16, 18 ஆகிய தேதி­க­ளில் முதல்வர் எடப்­பாடி பழனிசாமி பிர­சா­ரம் மேற் கொள்­கி­றார். அதன்­படி அவர் இன்று விக்­கி­ர­வாண்டி ஒன்றியத்துக்கு உட்­பட்ட முண்­டி­யம்­பாக்­கத்­தில் பகல் 1 மணிக்கு பிர­சா­ரத்தை தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து ராதா­பு­ரம், விக்­கி­ர­வாண்டி பேரூ­ராட்சி, டி. புதுப்பாளையம் ஆகிய பகு­தி­க­ளில் அ.தி.மு.க. வேட்­பாளர் முத்­த­மிழ் செல்­வ­னுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்­னத்­திற்கு வாக்கு சேக­ரிக்­கி­றார். இதனை தொடர்ந்து வரும் 16-ம் தேதி பகல் 2 மணிக்கு காணை­யில் பிர­சா­ரத்தை தொடங்­கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து மாம்­ப­ழப்­பட்டு, அரி­ய­லூர்திருக்கை, கெடார், சூரப்பட்டு, திரு­வா­மாத்­தூர் ஆகிய இடங்­க­ளி ­லும் , 18-ம் தேதி விராட்­டிக்­குப்­பம், தும்பூர், முட்­டத்­தூர், பன­ மலை,அன்­னி­யூர்,கடையம் ஆகிய பகு­தி­க­ளி­லும் தீவிர பிர­சா­ரம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து