முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் குப்பையை சேகரித்த மோடி மத்திய மந்திரி அமித்ஷா பெருமிதம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உண்மையான தலைவர் உதாரணத்தின் மூலமே வழிநடத்துவார் என பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்தது. கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கி இருந்த  மோடி, கடற்கரையில் நேற்று  காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கோவளத்தில் உள்ள கடற்கரையில் பிரதமர் மோடி தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த வீடியோ அதில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

ஒரு உண்மையான தலைவர் உதாரணத்தின் மூலமே வழிநடத்துவார். சுகாதார சீர்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி. அவரின் ஸ்வச்ச பாரத் மற்றும் சம்ருத பாரத் முயற்சியை நாம் பின் தொடருவோம் என கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து