முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. குறித்து எழும் விமர்சனங்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புனே  : ஜி.எஸ்.டி. வரியைப் பற்றிய விமர்சனங்கள் எழலாம். குறைபாடுகள் இருக்கலாம். எனினும் அது இந்த நாட்டின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது என்பதை உணர வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மகராஷ்டிர மாநிலம் புனேவில் தொழிலதிபர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஜி.எஸ்.டி. குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுவது பற்றி சிலர் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் கூறியதாவது:

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டபோது அதனைப் பலரும் விமர்சித்தனர். குறிப்பாக, தொழில்துறையினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஜி.எஸ்.டி. என்பது மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளாலும் வசூலிக்கப்படும் வரிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும். இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி மாநில அரசுகளின் ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டது.  ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் சில குறைபாடுகள் இருக்கலாம் . ஆனால் ஜி.எஸ்.டி.யை விமர்சிப்பவர்கள் அது இந்த நாட்டின் சட்டத்தின்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை உணர வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து