முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி விட்டார்: பிரதமருக்கு முதல்வர் புகழாரம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி விட்டார் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்,
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

பாரம்பரியம் மற்றும் பண்பாடு மிக்க தமிழ்நாட்டை, குறிப்பாக சரித்திர புகழ்வாய்ந்த மாமல்லபுரத்தை, இந்திய  - சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்கு தேர்ந்தெடுத்தமைக்காக நமது பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி, இன்று உலகத் தலைவர்களுக்கு இடையே உயர்ந்த தலைவராக விளங்கும் பிரதமர் மோடி இந்த செய்கையின் மூலம் தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். இது உலக நாடுகளின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியுள்ளது.

இந்த இரு பெரும் தலைவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு நல்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! நம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் இரு பெரும் தலைவர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்வித்த கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றி!இந்த கலை நிகழ்ச்சிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனது நன்றி! சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எனது நன்றி! அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை,பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை , மற்றும் அனைத்து அரசுத் துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து