முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையே கர்தார்பூர் வழித்தடத்தை நவ. 8-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். அங்கு சென்று வரும் சீக்கியர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்காக பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கர்தார்பூர் வழித்தடத் திட்டம் இந்தியா -பாகிஸ்தான் அரசாங்கங்களால் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த வழித்தடத்தை வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என மத்திய அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

குரு நானக்கின் ஆசீர்வாதத்தோடு சீக்கியர்களின் கனவான தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கான புனித பயணம் நனவாகப் போகிறது. வரும் நவம்பர் 8-ம் தேதி கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி வரலாறு படைக்க உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து