முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசை குறைகூறுவதே ஸ்டாலினின் வேலையாக உள்ளது - மதுரையில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : தமிழக அரசை குறை கூறுவதே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மா உணவக திட்டத்தை அனைத்து மாநிலத்தவரும் பின்பற்றி வருகின்றனர். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மடிக்கணினி திட்டத்தை உத்தரபிரதேச அரசு செயல்படுத்த முயன்றது. அவர்களது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

தமிழக அரசு இலவச மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தமிழக அரசை குறை கூறுவதே ஸ்டாலினின் வேலையாக உள்ளது. முன்பெல்லாம் கோ பேக் மோடி என்று கூறினர். தற்போது கம் பேக் மோடி என்று கூறுகிறார்கள். இன்று உலகம் முழுவதும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள். மோடி வேட்டி கட்டி வந்தது வரவேற்கத்தக்கது. பிகில் பட ஆடியோ வெளியீட்டில் நடிகர் விஜய் ஜனநாயக முறையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து