முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான், சவுதி இடையே சமரசம் செய்ய டெக்ரான் சென்றார் இம்ரான்கான்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : ஈரான், சவுதி அரேபியா இடையே சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார்.

ஏமன் நாட்டில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கின. இதன் காரணமாக ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டின. கடந்த 11-ம் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த ஈரானுக்கு சொந்தமான சபிதி என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இப்படிப்பட்ட தாக்குதல்களால் ஈரான், சவுதி அரேபியா இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இதில் சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன் வந்துள்ளார். இதற்காக அவர் நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, பிரதமரின் சிறப்பு உதவியாளர் சயீத் ஜூல்பிகர் அப்பாஸ் புகாரியும் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து