முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் உடல் நலக்குறைவு: அரியானாவில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காத அமித்ஷா

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : அரியானாவில் பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமித்ஷா பங்கேற்க இயலவில்லை என சிர்சா தொகுதி பா.ஜ.க. எம்.பி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரியானாவில் உள்ள படேகாபாத்  மாவட்டத்தின் தோஹானா, சிர்சா மாவட்டத்தின் எல்லெனாபாத் மற்றும் ஹிசார் மாவட்டத்தின்  நர்நாடு பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த 3 பிரசார கூட்டங்களிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேச இருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அமித்ஷாவால் இந்த பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க இயலவில்லை என சிர்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் பத்திரிக்கைகளுக்கு தெரிவித்தார்.  அமித் ஷா இல்லாத நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தோஹானா மற்றும் எல்லெனாபாத்தில் நடந்த தேர்தல் பேரணிகளில் உரையாற்றினர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து