முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரை மறந்து விடுங்கள்: பாக்.கிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

கர்னால் : காஷ்மீரை மறந்து விடுங்கள். அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவும் கூடாது என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

அரியானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக அரியானாவின் கர்னால் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

வளைகுடா பகுதியில் தீவிரவாத பதற்றத்தை குறைக்க முயற்சிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈரான் சென்றுள்ளார். ஆனால், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகளை தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று இம்ரான்கான் விரும்பினால், அதற்கு நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்க விரும்பி அதற்கு இந்தியாவின் உதவியைக் கோரினால் அதற்காக பாகிஸ் தானுக்கு ராணுவத்தை அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். காஷ்மீ்ரை நீங்கள் மறந்து விடுங்கள். காஷ்மீரைப் பற்றி பாகிஸ்தான் சிந்திக்கவும் கூடாது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி. இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இது தொடர்பாக வேறு எந்த நாடும் எங்களுக்கு அழுத்தமும் தரமுடியாது. 1947-ல் இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தான் உருவானது. ஆனால், 1971-ல் பாகிஸ்தானே இரண்டானது. காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ் தானின் போக்கு இதே போன்று தொடர்ந்தால் அந்நாடு மேலும் உடைவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து