முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: முறையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வந்தார். பின்னர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்காக மனுதாக்கல் செய்துள்ள கங்குலி பேட்டியளித்தார். அப்போது, எந்த அரசியல் கட்சி தலைவருடனும் தனக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தார். முதல் தர கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பேன். ஐ.பி.எல். தொடர்பான சிக்கல்களை பி.சி.சி.ஐ. தலைவராக நீடிக்க முயற்சிப்பேன்.

மேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக இருந்த அனுபவம் எனக்கு உள்ளது என கூறியுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜீவ் சுல்கா, பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம். கங்குலி தேர்வானது தொடர்பான முறையான அறிவிப்பு வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து