முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய கோலி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இடத்தில் இருந்தார். தடைக்குப்பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் 937 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு இறங்கினார். இந்நிலையில் புனேயில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்தார். இதனால் ஐ.சி.சி. தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து