ரஷ்யாவில் 45-வது வேர்ல்டு ஸ்கில்ஸ் கஸான் போட்டி- வெண்கல பதக்கம் வென்ற இளைஞருக்கு உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் பாராட்டு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      தமிழகம்
Vummidi bangarujewellers praise bronze medalist 2019 10 17

சென்னை : ரஷ்யாவில் நடைபெற்ற 45வது வேர்ல்டுஸ்கில்ஸ் கஸான் போட்டியில் ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் - ஐ உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் பாராட்டி கவுரவித்துள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி ஜுவல்லரி பிராண்டான உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், ரஷ்யாவில் நடைபெற்ற 45-வது வேர்ல்டுஸ்கில்ஸ் கஸான் 2019 நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிரமானிக் - ஐ பாராட்டி கௌரவித்திருக்கிறது. இந்த இளம் சாதனையாளரை பாராட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்வில் அமரேந்திரன் உம்மிடி ஜெம் ரூ ஜுவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனரும், தலைமைச் செயல் அலுவலருமான ராஜிவ் கார்க் பங்கேற்றார் . உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் -ன் நிர் வாக இயக்குனர் அமரேந்திரன் உம்மிடி பேசுகையில்,

எமது கிரியேட்டிவ் சென்டரில் இளம் நபர்களுக்கு பயிற்சியளிப்பது எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு கௌரவமாகும். புதிய உத்திகளை கற்றுக்கொள்வதற்கு இளம் மற்றும் பேரார்வம் மிக்க கைவினைக் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்க இந்நாட்டிலுள்ள அனைத்து ஆபரண தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் வி.பி.ஜி.ஏ. தேசிய திறன் மேம்பாடு கவுன்சில் தேர்வு செய்திருப்பது எங்களுக்கு பெருமையும், கௌரவமும் தந்திருக்கிறது. திறன்மிக்கவர்களை அடையாளம் கண்டறிவதும் மற்றும் ஒரு குறிப்பிட்ட சிறப்புப்பிரிவில் அவர்களுக்கு பயிற்சியளிப்பதும் ஒரு சவாலாக இருந்தது. இத்தகைய சர்வதேச செயல்தளங்கள் மற்றும் போட்டிகளில் இத்தகைய இளைஞர்களை பங்கேற்குமாறு செய்வது அவர்களது திறன்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுமாறு செய்யும். வி.பி.ஜே. நிறுவனத்தின் ஒரு அங்கமான கிரியேட்டிவ் சென்டர் ;அதன் சிறப்பான திறன் மற்றும் வடிவமைப்பிற்காக உலக வரைபடத்தில் இடம்பெற்றிருப்பது மதிப்புமிக்க ஒரு கௌரவமாகும் என்று கூறினார்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து