அ.தி.மு.க. 48-வது ஆண்டு விழா கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலை அணிவிப்பு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      தமிழகம்
EPS-OPS floral MGR-Jayalalitha statue 2019 10 17

சென்னை : அதி.மு.க.வின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கொட்டும் மழையில் நேற்று காலை (17-ம் தேதி) கட்சியின்  ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதை தொடர்ந்து அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து, அங்கே குழுமியிருந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைச்சர் டி.ஜெயக்குமார், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பிராட்வே எம்.இஸ்மாயில் கனி, மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி, வட்ட செயலாளர் கே. துளசி, முன்னாள் எம்.பி. திருப்பூர் சிவசாமி, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜே.அப்புதீபக், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே. கோபால், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வி.முருகன், டி.யூ.சி.எஸ். சீனிவாசன், லிபர்டி ராஜூ, முன்னாள் மாவட்ட செயலாளர் கு. சீனிவாசன், கே.எஸ். அஸ்லாம், சரஸ்வதி ரங்கசாமி, அஞ்சுலட்சுமி, கர்நாடக மாநில அ தி.மு.க. செயலாளர் எஸ்.டி. குமார், வட்ட செயலாளர் இளையமாறன், இளைய கிருஷ்ணன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை செல்வகுமார், செல்வ கண்ணன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையிலும் தொண்டர்கள் ஏராளமான பேர் நனைந்து கொண்டே திரளாக கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்த போது வாழ்த்து கோஷங்களை உற்சாகமாக எழுப்பினர். அந்த பகுதி முழுவதும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. முதல்வர், துணை முதல்வருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இந்நிகழ்ச்சியில் சிலரால் கலந்து கொள்ள முடியவில்லை.  அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டு அவர் சென்னை திரும்பி அ.தி.மு.க. தொடக்க விழாவில் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் அதி.மு.க. 48-வது ஆண்டு துவக்க விழா மிகவும் சிறப்பாக கோலாகலமாக நடைபெற்றது. ஆங்காங்கே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து