முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி வருகின்றனர்

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும்  நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன் சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த பணியாளர்கள், 5 எ.ம்.ஐ. -8 ஹெலிகாப்டர்கள், எம்.ஐ. -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டன. இந்நிலையில், ரஷ்யா நாட்டில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து