முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல் பாக்தாதி உயிரிழப்பால் இனி மேல் உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

அல் பாக்தாதி உயிரிழப்பால் இனிமேல் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை 2014-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி அந்த பகுதிகளை இஸ்லாமிய அரசாக அறிவித்தார். அதன்பின் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் வசம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன. இருப்பினும், ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க வீரர்கள், கூட்டுப்படையினர் மற்றும் பல்வேறு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்க அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு  வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏறக்குறைய 3 ஆண்டுகள் தேடுதலுக்குப்பின் அமெரிக்கப் படையினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆம், உலகத்தை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அல் பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் கே9 டாக்ஸ் ராணுவப் பிரிவு சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு குகையில் வைத்து கொலை செய்துள்ளது. இனிமேல் எந்த அப்பாவி மக்களுக்கும் அவரால் துன்பம் வராது. ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார். இனிமேல் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும். சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான அல்பாக்தாதி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து