முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தேவர் குருபூஜை தொடங்கியது.

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

கமுதி,- கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழாவையொட்டி தென் மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி, காவல் கண்ணாணிப்பாளர்கள், கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திங்கள் கிழமை யாகசாலை பூஜையுடன் குருபூஜை விழா தொடங்கியது.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது குருபூஜை விழா 28ம் தேதி ஆன்மீக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், 7 டி.ஐ.ஜிக்கள், 22 காவல் கண்காணிப்பாளர்கள் , 30 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் போலிஸôர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறித்து ஆலோசனை கூட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இதில் குருபூஜை விழாவின் போது பொதுமக்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் , போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாதவண்ணம் பாதுகாப்புகளை போலிஸôர் கவனமாக கையாள வேண்டும் என போலிஸôருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் மற்றும் ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் காலை 6 மணிக்கு மங்கள இசையுடன், 8 மணிக்கு லட்சார்சனை பெரு விழா, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதனையடுத்து அபிசேக ஆராதனை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி விகாஸ ரத்னா சிவ.பிச்சைக் குருக்கள் குழுவினரின் தலைமையில் யாகசாலை பூஜை, சிறப்பு அபிசேக ஆராதனை நடைபெற்றது. தேவர்ஆலய பொறுப்பாளர்கள், குடும்பத்தினர், கமுதி மற்றும் பசும்பொன் கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து