முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியல் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் 24 வது இடம்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- கியூ.எஸ்.நிறுவனத்தின் இந்திய பல்கலைக்கழ தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 24-வது இடம் பிடித்துள்ளது.
    கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து க்யூ. எஸ். நிறுவனம் இந்தியா உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் மத்திய, மாநில மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன. இந்த வரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் தேசிய அளவில் 24 வது இடத்தைப் பெற்றுள்ளது. க்யூ.எஸ். இந்தியா தர வரிசை என்பது கல்வி சார் மதிப்பீடுகள், பல்கலைக் கழக பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மேற்கோள் எண்ணிக்கை, மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம், பன்னாட்டு மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் மதிப்பிடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். தமிழக அளவில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றை அடுத்து காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. தமிழக அளவில் கலை மற்றும் அறிவியல் பலகலைக் கழகங்களின் தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக் கழகம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் தேசிய அளவில் தரவரிசை பெற்ற பலகலைக் கழகங்களில் கலை அறிவியலில் அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. 
   கடந்த அக்டோபர் 21-ந் தேதி கோவாவில் நடைபெற்ற  க்யூ.எஸ். உச்சி மாநாட்டில் இந்திய  அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இதற்கான சான்றிதழை அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் நா.ராஜேந்திரனிடம்  வழங்கினார்.  அழகப்பா பலகலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி.விநாயக மூர்த்தி, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளி விநாயகம் (செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராமநாதபுரம்) மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் நா.ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து