முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஊள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துவக்கம்! திருமங்கலம் யூனியனில் வாக்குப் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிகள் தீவிரம்!!

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பெட்டிகளை பழுது பார்த்திடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநிலை தேர்தல் ஆணையர் ரா.பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இரு தினங்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள கலெக்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.இதனைதொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளை ஆய்வு செய்து அவற்றின் பழுதுகளை நீக்கி சீர்செய்திடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 38ஊராட்சிகளில் தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டிகளை புதுப்பித்திடும் பணிகளில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி நீண்ட நாட்களாக பயனின்றி வைக்கபட்டிருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் நீக்கி புதுப்பிக்கப்பட்டு வருவது உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் வரவுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.வாக்குப் பெட்டிகளை பழுதுநீக்கி புதுப்பித்திடும் பணிகள் விரைவில் முடிவடைந்திடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து