பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கோப்பையை வென்றார் ஜோகோவிச்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      விளையாட்டு
Djokovic 2019 11 04

பாரீஸ் : பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) வீழ்த்தி 5-வது முறையாக இங்கு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.7¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34 - வது முறையாகும். இந்த வகையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முன்னணியில் (35 பட்டம்) இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதை ஜோகோவிச் நெருங்கியுள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து